× மருத்துவம் வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு கல்வி E-paper உலகம் தமிழ்நாடு சினிமா முக்கிய செய்தி

ஆட்டோமொபைல் துறை கடும் சரிவு - 2 லட்சம் பேர் வேலையிழப்பு

05-08-2019

ஆட்டோமொபைல் துறை மந்தகதியில் இருப்பதால், கடந்த 3 மாதங்களில் வினியோகஸ்தர்களிடம் பணிபுரிந்த 2 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.
கார்கள், இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளதால், அவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துள்ளன. இதனால் ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்களின் லாபம் கணிசமாக குறைந்துள்ளது.

இதன் எதிரொலியாக மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மகிந்திரா, அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன் தாக்கம் ஆட்டோமொபைல் வினியோகஸ்தர்களையும் விட்டுவைக்கவில்லை.

விற்பனையகங்களில் பணிபுரிந்த 2 லட்சம் பேர் கடந்த 3 மாதங்களில் வேலையிழந்திருப்பதாக ஆட்டோமொபைல் வினியோகஸ்தர் சங்க கூட்டமைப்பு தலைவர் ஆஷிஷ் ஹர்ஷாராஜ் தெரிவித்துள்ளார்.
இதே நிலை நீடித்தால் அடுத்து, தொழில்நுட்ப துறையில் இருப்பவர்களுக்கும் வேலை பறிபோகலாம் என்றும் அவர் கூறினார். நாடு முழுவதும் உள்ள 15 ஆயிரம் வினியோகஸ்தர்களின் கீழ் இயங்கும் 26 ஆயிரம் ஆட்டோமொபைல் விற்பனையகங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. நாட்டின் ஜிடிபியில் ஆட்டோமொபைல் துறையின் பங்கு 8 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது......

இது தொடர்பான செய்திகள்