× மருத்துவம் வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு கல்வி E-paper உலகம் தமிழ்நாடு சினிமா முக்கிய செய்தி

ரிலையன்ஸ் குழும கடன் தொகை உரிய காலத்தில் செலுத்தப்படும் : அனில் அம்பானி

11-06-2019

ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் கடனை குறித்த காலத்திற்குள் செலுத்த உறுதிபூண்டுள்ளதாக, அதன் தலைவர் அனில்அம்பானி தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் இன்பிராஸ்டிரக்சர், ரிலையன்ஸ் கேப்பிட்டல், ரிலையன்ஸ் பவர் போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை கடந்த சில வாரங்களில் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அனில்அம்பானி, கடந்த 14 மாதங்களில் அசல் மற்றும் வட்டி தொகை என 35 ஆயிரத்து 400 கோடி ரூபாயை கடன் வழங்கிய நிறுவனங்களுக்கு செலுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் முன் எப்போதும் இல்லாத சவாலான நிதி சூழலில் இந்த தொகை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த காலத்திற்குள் கடனை செலுத்த, சொத்துக்களை விற்று பணத்தை திரட்ட திட்டுமிட்டுள்ளதாகவும் அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.

சில வழக்குகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்காததால், தங்களது நிறுவனங்களுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும் அனில் அம்பானி கூறியுள்ளார்......

இது தொடர்பான செய்திகள்