× மருத்துவம் வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு கல்வி E-paper உலகம் தமிழ்நாடு சினிமா முக்கிய செய்தி

பிரபல இயக்குனரை காதலித்தும் மணம் முடிக்காதது ஏன்? மனம் திறந்த மூத்த நடிகை ஆஷா பாரேக்

08-12-2019

திருமணமான தயாரிப்பாளர்- இயக்குனர் ஒருவரைக் காதலித்ததால், குடும்பத்தை விட்டு அவரை பிரிக்க மனமில்லாமல் வாழ்நாள் முழுக்க தாம் கல்யாணமே செய்யாமல் வாழ்ந்திருப்பதாக பழம்பெரும் நடிகையான ஆஷா பாரேக் தெரிவித்துள்ளார்.

70-களின் முன்னணி பாலிவுட் நாயகியான ஆஷா பாரேக், தயாரிப்பாளரும் இயக்குனருமான நசீர் உசேனுடன் உயிருக்கு உயிரான காதல் வயப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

நசீரும் தமது தாயாரும் திருமணம் செய்துகொள்ளும்படி வலியுறுத்திய போதும், நசீரின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியும் துன்பமும் தரவிரும்பவில்லை என தெரிவித்துள்ள ஆஷா பாரேக், திருமண உறவு என்பது பட்டாம்பூச்சிகளும் வானவில்லும் மட்டும் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவருக்கு ஒருவர் துணை நிற்பதும், சுகதுக்கங்களில் பங்கேற்பதும்தான் திருமண உறவு. ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் அவசர கதியில் காதலிப்பதும் திருமணம் செய்வதும் பிரிவதுமாக இருப்பதாக ஆஷா பாரேக் வேதனை தெரிவித்தார்.

.....

இது தொடர்பான செய்திகள்