× மருத்துவம் வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு கல்வி E-paper உலகம் தமிழ்நாடு சினிமா முக்கிய செய்தி

மக்களவை தேர்தலுக்காக ரூ.27,000 கோடி செலவழித்த பாஜக... எங்கிருந்து வந்தது? என காங்கிரஸ் கேள்வி

08-06-2019

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் வெற்றி பெற செலவழித்த ரூ.27,000 கோடி பணம் எங்கிருந்து வந்தது என்பதை பாரதிய ஜனதா கட்சி வெளிப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனுசிங்வி தேர்தலில் வெற்றி பெற பண பலத்தை மட்டுமே வியூகமாக பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். சுதந்திரமான, நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறாவிட்டால் ஜனநாயகம் கேள்விக்குறியாகும் என்று அவர் எச்சரித்திருக்கிறார். மக்களவை தேர்தலில் வெற்றி பெற பாஜக ரூ.27,000 கோடி செலவழித்திருப்பதாக சென்டர் பாஃபர் மீடியா என்ற தன்னார்வ நிறுவனம் தகவல் வெளியிட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான மொத்த செலவான ரூ.60,000 கோடியில் 45 சதவீதம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கல்விக்கான பட்ஜெட்டில் 30 சதவீதம், சுகாதார பட்ஜெட்டில் 43 சதவீதம் என்றும் சிங்வி கூறியுள்ளார். பாதுகாப்புத்துறை பட்ஜெட்டில் 10 சதவீதம், நூறு நாள் வேலை திட்டத்தின் 45 சதவீத தொகையை பாஜக தேர்தல் வெற்றிக்கு செலவழித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியான பாஜக தேர்தல் செலவுக்கான நிதி எங்கே இருந்து வந்தது என்று வெளிப்படுத்தினால் ஒவ்வொரு கட்சியும் விவரங்களை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் சிங்வி வலியுறுத்தியுள்ளார். .....

இது தொடர்பான செய்திகள்