× மருத்துவம் வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு கல்வி E-paper உலகம் தமிழ்நாடு சினிமா முக்கிய செய்தி

ஓடும் ரயில்களில் மசாஜ்.! விரைவில் அறிமுகம்

08-06-2019

நாட்டில் முதன்முறையாக, ஓடும் ரயில்களில், வெறும் 100 ரூபாய்க்கு மசாஜ் செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதுதொடர்பாக, மேற்கு ரயில்வேயின் ரட்லம் (Ratlam) மண்டலம் சார்பில் பரிந்துரை அளிக்கப்பட்டிருக்கிறது. ஓடும் ரயில்களில், தலை மற்றும் பாதங்களை மசாஜ் செய்துவிட, 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

புதுடெல்லி-இந்தூர் இண்டர்சிட்டி, டேராடூன்-இந்தூர், அமிர்தசரஸ்-இந்தூர் உள்ளிட்ட 39 ரயில்களில், முதற்கட்டமாக, தேவைப்படும் பயணிகளுக்கு, 100 ரூபாய் கட்டணத்தில் மசாஜ் செய்யும் முறையை அறிமுகப்படுத்த, ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஒரு ரயிலில், மூன்று முதல் 5 மசாஜ் நிபுணர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது......

இது தொடர்பான செய்திகள்