× மருத்துவம் வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு கல்வி E-paper உலகம் தமிழ்நாடு சினிமா முக்கிய செய்தி
main nav end -->

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வேதனை அளிப்பதாக எம்.பி திருமாவளவன் கூறியுள்ளார்.

22-08-2019

ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய லட்சக்கணக்கான ஆசிரியர்களில் சில நூறு பேர் மட்டுமே தேர்ச்சிப்பெற்றுள்ளனர் என்றும், இது வேதனையளிப்பதாகவும் கூறினார்.

மேலும் இதனை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், கல்வித்தரத்தையும், பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் தரத்தையும மேம்படுத்துவது அரசின் கடமை என்றும் திருமாவளவன் கூறினார்.

மேலும் கூடங்குளத்தில் 3ஆவது அணு உலை அமைப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் என்றும் அவர் கூறினார்......

இது தொடர்பான செய்திகள்