× மருத்துவம் வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு கல்வி E-paper உலகம் தமிழ்நாடு சினிமா முக்கிய செய்தி
main nav end -->

மாவட்டங்களைப் பிரிப்பது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் - மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்

28-08-2019

தமிழகத்தில் பெரிய மாவட்டங்களை பிரிப்பது குறித்து, முறையாக மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

சேலம் மாவட்டம் தாரமங்கலம் தேர் வீதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. 7 அடி பீடத்தில், 8 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் நிறுவப்பட்டிருந்த சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், சேலம் மார்டன் தியேட்டர்சில் கருணாநிதி பணியாற்றி கொண்டிருந்த போது தான் திமுக உதயமானது என்றார்.

தமிழகத்தில் மாவட்டங்கள் பிரிப்பது குறித்த முறையாக மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சேலம் உருக்காலை தனியார்மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு எடுத்துள்ளது என்று குறிப்பிட்ட ஸ்டாலின், அதனை தடுத்து நிறுத்த தமிழக முதல்வர் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை என்று குற்றம்சாட்டினார்.

.....

இது தொடர்பான செய்திகள்