× மருத்துவம் வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு கல்வி E-paper உலகம் தமிழ்நாடு சினிமா முக்கிய செய்தி
main nav end -->

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் அ.தி.மு.கவை அசைக்க முடியாது - அமைச்சர்

31-08-2019

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் ஒருபோதும் அதிமுகவை அசைக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் அவர் கட்சி தொடங்கினால் தாம் வரவேற்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா வேல்டு சிட்டி வளாகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், முன்னணி நிறுவனங்கள் இணைந்து 1.5லட்சம் மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சீமான் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் விஜய் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்றும் கூறினார்.

.....

இது தொடர்பான செய்திகள்