× மருத்துவம் வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு கல்வி E-paper உலகம் தமிழ்நாடு சினிமா முக்கிய செய்தி
main nav end -->

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு !! முதலமைச்சர் அதிரடி முடிவு !!

05-09-2019

தெலங்கான மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 அல்லது 61 ஆக உயர்த்த அம்மாநில  முதலமைச்சர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநில முதலமைச்சராக  சந்திரசேகர ராவ் உள்ளார். இவர் தனது தேர்தல் அறிக்கையில் “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 அல்லது 61 ஆக உயர்த்துவோம்” என்று குறிப்பிட்டு இருந்தார். 

தற்போது அவரே தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகவும்  இருக்கிறார். எனவே அவர், தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தற்போது அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 அல்லது 61 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்து இருக்கிறார். 

தெலுங்கானா கிராமப்புற அபிவிருத்த திட்ட விழா ஒன்றில் பேசும்போது, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், அரசு ஊழியர்களின் பதவி உயர்வு குறித்த மதிப்பீடுகள் பட்டியலிடப்பட்டு வருகின்றன.

ஊழியர்கள் அனைவரும் தங்கள் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். அரசு ஊழியர்களின் தகுதிக்கு ஏற்ப அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்படும். மேலும் தேவைக்கேற்ப அரசு உயர் பதவிகள் உருவாக்கப்படும் என சந்ந்திசேகர ராவ் தெரிவித்தார்.

.....

இது தொடர்பான செய்திகள்