× மருத்துவம் வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு கல்வி E-paper உலகம் தமிழ்நாடு சினிமா முக்கிய செய்தி

விரைவில் மாருதி எர்டிகா ஸ்போர்ட் இந்தியாவில் அறிமுகம்

25-06-2019

கடந்த ஆண்டு இரண்டாம் தலைமுறை மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வடிவமைப்பு, இடவசதி, தொழில்நுட்ப அம்சங்களில் சிறப்பாக மேம்படுத்தப்பட்ட இந்த கார், வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மாருதி எர்டிகா காரின் சொகுசான மாடலும் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் கேப்டன் இருக்கைகளுடன் 6 சீட்டர் மாடலாக வர இருக்கிறது. இந்த காரின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன.

அதில், மாருதி எர்டிகா காரில் கூடுதல் கவர்ச்சிக்காக பல ஆக்சஸெரீகள் சேர்க்கப்பட்டுள்ளன. பெரிய கிரில் அமைப்பு, குரோம் பாகங்கள், பெரிய ஏர் இன்டேக் அமைப்புடன் மிரட்டலான பம்பர் அமைப்புடன் வர இருக்கிறது. காரை சுற்றிலும் பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன், சாதாரண எர்டிகாவைவிட ஸ்போர்ட் மாடல் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கும். புதிய அலாய் வீல், ரூப் ரெயில்களும் இடம்பெற்றுள்ளன. இன்டீரியரிலும் ஏராளமான கூடுதல் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முழுவதும் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. முக்கிய மாற்றமாக, இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகளுடன் 6 சீட்டர் மாடலாக வர இருக்கிறது. இன்னும் சில சிறப்பம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

இப்புதிய மாருதி எர்டிகா ஸ்போர்ட் காரில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு அம்சத்துடன்கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும். புதிய மாருதி எர்டிகா ஸ்போர்ட் கார் மாடலானது அதிக சிறப்பம்சங்கள் கொண்ட டாப் வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்படும். இந்த எர்டிகா மாடலானது, மாருதியின் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக எதிர்பார்க்கப்படுகிறது. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை......

இது தொடர்பான செய்திகள்