× மருத்துவம் வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு கல்வி E-paper உலகம் தமிழ்நாடு சினிமா முக்கிய செய்தி

சோனி நிறுவனத்தின் கியூ. எக்ஸ் 10 லென்ஸ்:

26-06-2019

சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள கியூ.எக்ஸ் 10 ( Q X 10) எனும் இந்த லென்ஸ் எந்த ஸ்மார்ட் போன் கேமராவையும் பத்து மடங்கு அதிகமான துல்லியத்துடன் புகைப்படம் எடுக்க வைக்கும்.

இதில் சென்சார் இருப்பதால் மேலும் சிறப்பாக செயல்படுகிறது. இதை எளிதாக நமது போனுடன் கொடுக்கப்பட்டுள்ள கிளிப் மூலம் இணைத்துக் கொள்ளலாம்.

ஒன் டச்சில் இது நமது ஸ்மார்ட் போனுடன் கனெக்ட் ஆகிவிடும். பெரும்பாலும் எல்லா வகை ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களிலும் இது பொருந்தும். இதில் எடுக்கப்படும் புகைப்படங்கள் லென்சுடைய செயலி மற்றும் செல்போன் ஆகிய இரண்டிலும் சேமிக்கப்படுகின்றன.

மிக குறைந்த வெளிச்சத்தில் கூட தரமான புகைப்படங்களை இந்த லென்ஸை கொண்டு எடுக்கலாம். ஒரு முழு நீள ஹெச்.டி. படத்தையே இந்த லென்ஸ் துணையுடன் எடுக்க முடியும். சிறிய வகை பூச்சிகள், தாவரங்கள் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்ய விரும்புவோர் இதற்கென்று பிரத்யேகமாக கேமரா ஏதும் வாங்க வேண்டியதில்லை. இந்த லென்ஸை மட்டும் வாங்கினாலே போதுமானது......

இது தொடர்பான செய்திகள்