ஃபேஸ்புக் நிறுவனம் 27 பங்குதாரர்களுடன் இணைந்து புதிதாக லிப்ரா என்னும் டிஜிட்டல் கரன்ஸியை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யவுள்ளது.
சர்வதேச அளவில் உலகையே இணைக்கும் வகையில் ஒரு க்ளோபல் கரன்ஸியை அறிமுகப்படுத்துவதே ஃபேஸ்புக்கின் குறிக்கோள். ஆனால், லிப்ரா என்றால் என்ன? லிப்ரா எப்படிச் செயல்படும்? போன்ற கேள்விகள் மக்கள் மத்தியில் இருக்கின்றன.
லிப்ரா என்னும் க்ரிப்டோகரன்ஸியை கட்டணங்கள் ஏதும் இன்றி பயனாளர்கள் உபயோகிக்க முடியும். பிட்காயின் எப்படி இயங்கியதோ அதன் அடிப்படையிலேயே இந்த லிப்ராவும் இயங்கும். ஆனால், பிட்காயினில் இருந்து மாறுபட்டு இருப்பது லிப்ராவின் ஸ்திரத்தன்மை.
உலகின் அத்தனை கரன்ஸிகளாலும் செல்லுபடியாகும் கரன்ஸியாகவே லிப்ரா உள்ளது. ஃபேஸ்புக் குழுவினரே இந்த லிப்ரா கரன்ஸியை இணைந்து உருவாக்கியுள்ளனர். 2020-ம் ஆண்டில் லிப்ரா வெளியாகும் எனக் கூறப்பட்டாலும், சர்வதேச அளவில் எழுந்துள்ள எதிர்ப்புகள் லிப்ரா வெளியீட்டைக் காலதாமதமாக்கும் என்றே கூறப்படுகிறது......