× மருத்துவம் வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு கல்வி E-paper உலகம் தமிழ்நாடு சினிமா முக்கிய செய்தி

இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜியோ ..! மிக குறைந்த கட்டணம்... டிவி, போன், இன்டர்நெட் எல்லாமே ஒரே லைனில்..!

30-07-2019

ஜியோ அறிமுகமாகி தொலைத்தொடர்பு துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. ஜியோ உடனான போட்டியை சமாளிக்க முடியாமல், மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன. உதாரணத்திற்கு ஏர்செல் நிறுவனத்தை சொல்லலாம்.

இந்த நிலையில் மீண்டும் மிகவும் மலிவு விலையில், ஜிகா பைபர் சேவையை கொண்டு வர சோதனையில் இறங்கி உள்ளது. இந்த சேவையை, ரூ.600 இல், 50Mbps வேகத்தில் இயங்க முடியும்.

இந்த சேவையை தற்போது ஒரு குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் சோதனை அடிப்படையில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சோதனை வெய்ட்ரி அடையும் பட்சத்தில் விரைவில் நாடு முழுக்க சேவை வழங்க உள்ளது. இந்த சேவையின் மூலம், டிவி, இணையம், போன் என மூன்று சேவைகளையும் ஒரே இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்.

ரூ.600 கட்டணத்தில்,100Mbps வேகத்தில் இயங்கும் இணைய சேவையைப் பெற முன்பணமாக ரூ.1000 செலுத்த வேண்டி இருக்கும் என்றும் பின்னர் மாதம் தோறும் வெறும் ரூ.600 செலுத்தி சேவையை தொடர்ந்து பெறலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது. இது குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. .....

இது தொடர்பான செய்திகள்