× மருத்துவம் வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு கல்வி E-paper உலகம் தமிழ்நாடு சினிமா முக்கிய செய்தி

தைவா நிறுவனத்தின் அட்டகாசமான 49-இன்ச் டிவி அறிமுகம்.!

10-09-2019

ஜப்பானிய நிறுவனமான தைவா தனது 49 இன்ச் Quantum Luminit டிவி (D50F58S)மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டு வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட தைவா 49-இன்ச் மாடல் பொதுவாக எச்டி Quantum Luminit டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு ஏ-பிளஸ் கிரேடு பேனல், 1920 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த டிவி மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

இந்த சாதனத்தில் குவாட்-கோர் பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த டிவி மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

தைவா 49-இன்ச் டிவி மாடல் பொதுவாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ‘Big Wall' UI என்ற இயங்குதளம் மூலம் இந்த சாதனம் இயக்கப்படுகிறது. இந்த வசதி பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளடக்கப்பட்ட ஆப்ஸ் வசதியும் உள்ளது, பின்பு கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பல்வேறு ஆப்ஸ் வசதிகளை பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும் வகையில் இந்த டிவி மாடல் வெளியிட்ப்பட்டுள்ளது.

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட தைவா 49-இன்ச் மாடலின் விலை 27,990-ஆக உள்ளது, குறிப்பாக இந்த சாதனம் ஆன்லைன் தளங்களிலும் பின்பு சில ஆஃப்லைன் தளங்களிலும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

.....

இது தொடர்பான செய்திகள்