× மருத்துவம் வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு கல்வி E-paper உலகம் தமிழ்நாடு சினிமா முக்கிய செய்தி

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நள்ளிரவில் மழை

25-06-2019

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில்,12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 6 மாதங்களாக மழை பெய்யாததாலும்,கடும் வெப்பத்தாலும் சென்னைவாசிகள் இரவு நேரத்தில் புழுக்கத்திலும், பகல் நேரத்தில் வெப்பத்திலும் தவித்தனர்.இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வெப்பம் ஓரளவு தணிந்து காணப்படுகிறது.நேற்று நள்ளிரவில் சென்னை ராயப்பேட்டை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், கீழ்க்கட்டளை, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரமாக நீடித்த மழையால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் இதமான சூழல் நிலவியது.

அரியலூர்,விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, கடலூர் மாவட்டம் திட்டக்குடி, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய இடங்களிலும் மழை பெய்துள்ளது.

இதனிடையே,12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம்,கடலூர் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாகவும்,மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் கோவையில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது......

இது தொடர்பான செய்திகள்