× மருத்துவம் வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு கல்வி E-paper உலகம் தமிழ்நாடு சினிமா முக்கிய செய்தி

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம் தகவல்

01-01-1970

திருவனந்தபுரம்: தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கேரளா, லட்சத்தீவு, அந்தமானில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கையை அடுத்து கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், மற்றும் திருவனந்தபுரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கும். இந்த வருடம் 6 நாட்கள் தாமதமாக 6ம் தேதி தான் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் மேலும் 2 நாட்கள் தாமதமாக 8ம் தேதி தான் பருவமழை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் கேரளாவில் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த வருடம் வழக்கமாக பெய்யும் அதே அளவு பருவமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது......

இது தொடர்பான செய்திகள்