× மருத்துவம் வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு கல்வி E-paper உலகம் தமிழ்நாடு சினிமா முக்கிய செய்தி

தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியனை கைது செய்யக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

11-06-2019

போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியனை கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பார்த்திபன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி மா.சுப்பிரமணியன், காஞ்சனா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், விசாரணைக்கு வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு தள்ளிவைப்பதாகவும், அதுவரை மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோரை காவல்துறை கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டார். முன்ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டர்......

இது தொடர்பான செய்திகள்