முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துப் பேசினார்.
ஆளுநர் மாளிகையில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சந்திப்பின் போது, அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
அண்மையில் டெல்லி சென்ற ஆளுநர் பன்வாரிலால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து மாநிலத்தின் நிலவரம் உள்ளிட்டவை குறித்து அறிய இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.
டிஜிபி, தலைமை செயலாளரின் பதவிக்காலம் நிறைவடைவதால் புதிய அதிகாரிகளை நியமிப்பது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. .....